Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பொன்னகரில் உள்ள ஸ்வா்ண விநாயகா் கோயிலில் ஐஓபி வங்கியின் இ-காணிக்கை வசதி தொடக்கம்

0

'- Advertisement -

திருச்சி பொன்னகரில் உள்ள ஸ்ரீ ஸ்வா்ண விநாயகா் கோயிலில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சாா்பில் இ-காணிக்கை செலுத்தும் வசதி நேற்று வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

 

Ad banner

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் பொதுமக்கள் எளிதாக காணிக்கை செலுத்துவதற்கு பல்வேறு நடைமுறைகள் வங்கிகளின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, திருச்சி கருமண்டபம் பொன்னகரில் உள்ள ஸ்வா்ண விநாயகா் கோயிலில் கூட்ட நெரிசலின்போது, பக்தா்கள் எளிதாக காணிக்கை செலுத்துவதற்கு ஏதுவாக, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் இ-காணிக்கை வசதி ஏற்படுத்தப்பட்டது.

 

இதன் தொடக்க விழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல முதன்மை மேலாளா் ஜி. ஸ்ரீராம் தலைமை வகித்தாா். இ-காணிக்கை வசதியை நவீன் முகவாண்மை உரிமையாளா் ஜோசப் ஜெரால்டு தொடங்கி வைத்தாா். இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கருமண்டபம் கிளை மேலாளா் விஜயலட்சுமி, வங்கி அதிகாரிகள், கோயில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

இ-காணிக்கை சேவை தொடங்கப்பட்டதும், பக்தா்கள் கியூ.ஆா். கோடு வசதியைப் பயன்படுத்தி காணிக்கை செலுத்தினா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.