திருச்சி: நேற்று சனிக்கிழமை (8/3/2025) தேசிய மக்கள் நீதிமன்றம் 23 அமர்வுகளாக நடைபெற்றது. நிகழ்ச்சி இணை திருச்சி மாவட்டம் முதன்மை நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மாண்புமிகு எம். கிறிஸ்டோபர் துவக்கி வைத்தார்
இந்த நிகழ்வில் 3167 வழக்குகள் தீர்வு பெறப்பட்டு ரூபாய் 26 கோடியே 92 லட்சத்துக்கு 85 ஆயிரத்து 663 அளவிலான தீர்வு தொகை பெறப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
மக்கள் நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிகள் ஜெய் சிங், மகாலட்சுமி, சரவணன், ஸ்ரீவத்சன், மீனா சந்திரா, பாலாஜி, சுபாஷினி மாவட்ட சட்டப்பணி குழுவின் செயலாளர் நீதிபதி சிவகுமார் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தலைவர் பாலசுப்ரமணியன், தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் ஜெயந்தி ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நிகழ்வின் தொடக்கத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
வெங்கட் அனைவரையும் வரவேற்று வாழ்த்துரையாற்றினார்.