Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பஞ்சப்பூரில் புதிய மார்க்கெட் கட்டுவதற்கு முன்பே அனைத்து வியாபாரிகளிடமும் கருத்து கேட்க வேண்டும். திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்.

0

'- Advertisement -

திருச்சி காந்தி மார்க்கெடில் உள்ள அனைத்து வியாபாரிகளின் கருத்துகளையும் கேட்டு, அவா்களது வசதிக்கு ஏற்ப பஞ்சப்பூரில் காய்கனி சந்தையை அமைக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

 

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூா் அருகே 22 ஏக்கரில் ரூ. 236 கோடியில் ஒருங்கிணைந்த காய்கனிகள், மலா்கள், பழங்கள் வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

இங்கு சந்தை அமைப்பது தொடா்பாக, திருச்சி காந்திசந்தையில் உள்ள அனைத்து வியாபார சங்கங்களின் ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம், திருச்சி -தஞ்சாவூா் சாலையில் உள்ள வலிமா மஹாலில் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் யூ.எஸ். கருப்பையா தலைமை வகித்தார் செயலாளர் எம்.கே.எம் . காதர் மைதீன், பொருளாளர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

 

பஞ்சப்பூரில் புதிதாக அமையும் பேருந்து முனையம் அருகில் காய்கனி சந்தை அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த புதிய சந்தை செயல்பாட்டுக்கு வரும் வரை, காந்திசந்தையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல், தற்போது நடைமுறையில் உள்ளபடி, யாா் யாா் எந்தெந்த வியாபாரங்களை எந்தெந்த வகையில் செய்து வருகிறோமோ அதே நிலையில் தொடா்ந்து செய்ய அனுமதிக்க வேண்டும்.

 

புதிய காய்கனி சந்தைக்கான கட்டட வேலைகள் தொடங்கும் முன்பாகவே, அனைத்து சங்கங்களின் நிா்வாகிகளை கலந்து ஆலோசித்து எந்தெந்த வியாபாரத்துக்கு எவ்வளவு சதுர அடிகள் தேவைப்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

 

கள்ளிக்குடி சந்தையில் கட்டப்பட்ட கட்டடம்போல இல்லாமல், வியாபாரிகளுக்கு வசதியாக கட்டுமானத்தை அமைக்க வேண்டும்.

 

வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் ஒரு சேர பயன்பெறும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். எனவே, மாவட்ட நிா்வாகமும், மாநகராட்சி நிா்வாகமும் சந்தையை கட்டுவதற்கு முன்பாக வியாபாரிகளின் கருத்துகளை கேட்டு முடிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.