2026ல் அதிமுக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. திருச்சி மாவட்ட செயலாளர் குமார் தலைமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை
2026 சட்டமன்ற தேர்தலில்
எடப்பாடி தலைமையில்
மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது .
திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில்
பூத் கிளை கழகங்கள் அமைத்தல், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்த்தல் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்த்தல் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று காட்டூரில் இன்று நடைபெற்றது.
தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார்
தலைமை தாங்கினார்.
மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இளைஞர் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் மற்றும் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர்கள் அனைவருக்கும் தவறாமல் அடையாள அட்டைகளை கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.
திமுக ஆட்சியில் அனைத்து தர தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் ஆகவே மீண்டும் எடப்பாடியாரை முதல்வராக மக்கள் தீர்மானித்து விட்டார்கள்.
எடப்பாடி தலைமையில் வலுவான கூட்டணி அமையும்.
அவர் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
இக் கூட்டத்தில் அவைத்தலைவர் அருணகிரி, முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திரசேகரன் எஸ் எம் பாலன், சின்னசாமி, மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா தேவி, ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி.கார்த்திக் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சூரியூர் ராஜா, என்கிற ராஜா, மணிகண்டன்,
பகுதி செயலாளர் தண்டபாணி நகர செயலாளர் எஸ் பி பாண்டியன், பாசறை செயலாளர் அருண் நேரு, மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.