விழுப்புரம் மாவட்டம் கிரிமேடு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருடைய இரண்டாவது மகன் ஜெயசூர்யா (வயது 24) சட்டக் கல்லூரி மூன்றாவது ஆண்டு படித்து வருகிறார்.
இவர் இதே பகுதியில் வசித்து வரும் ரம்யா (20) என்ற பெண்ணை காதலித்து வந்தார் எனக் கூறப்படுகிறது.
இவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த தகவல் அறிந்த இரண்டு வீட்டு பெற்றோர்கள் ஜெயசூர்யாவை அழைத்து அந்த பெண் உனக்கு தங்கச்சி முறை எனக் கூறியுள்ளனர். மேலும் பெண் வீட்டார் ரம்யாவையும் கண்டித்து அண்ணன் உறவு உனக்கு ஜெயசூர்யா என தெரிவித்துள்ளனர்.
இதை புரிந்து கொண்ட ஜெயசூர்யா தன் காதலி ரம்யாவிடம் இதைப்பற்றி கூறியுள்ளார். அதற்கு ரம்யாவுக்கு என்ன தெரியும், நீ என்ன எனக்கு அங்காலயா பங்காளியா நடைமுறைக்கு சும்மா சொல்கிறார்கள் நாம் திருமணம் செய்து வாழ வேண்டும் எனவும் காதலி தெரிவித்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெயசூர்யாவை விடாமல் தான் உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறி தனக்குத்தானே ரம்யா கைகளில் அறுத்துக் கொண்டு அதனுடைய புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் மூலமாக ஜெயசூர்யாவுக்கு அனுப்பி உள்ளார்.
இதைப் பார்த்து மனம் உருகிய காதலன் என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் தன் காதலியுடன் பேசி வந்துள்ளார். பின்னர் தன் காதலன் ஜெயசூர்யாவை என்னிடம் யாரும் பிரிக்க முடியாது என் அப்பாவாக இருந்தாலும் அவருக்கு நான் எலி மருந்து கொடுத்துக் கொள்ளப் போகிறேன் எனவும் ஜெயசூர்யாவுக்கு whatsapp-ல் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் காதலி ரம்யா.
பின்னர் இதற்கு ஏன் உன் தகப்பனாரை கொள்ள வேண்டும் என கேட்டதற்கு அவர்தான் சம்மதிக்க மாட்டுகிறார் நம் காதலுக்கு தடையாக இருக்கிறார் என தெரிவித்திருக்கிறார் காதலி ரம்யா. இதற்கு பயந்து போன காதலன் ஜெயசூர்யா சிறிய நாட்களில் சிறுக சிறுக காதலி ரம்யா உடன் தொடர்பில் இருப்பதை துண்டித்து காதலி தொலைபேசி எண்ணை பிளாக் பண்ணி உள்ளார்.
மீண்டும் காதலி ரம்யா தன்னை காதலன் ஜெயசூர்யா பிரிந்து சென்று விடுவார் என தெரிந்து கொண்டு தன்னுடைய அம்மா தொலைபேசியில் இருந்தும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காதலன் தன் காதலி சொன்னவுடன் மீண்டும் பிளாக் பண்ண நம்பரை அன் பிளாக் செய்து உள்ளார்.
பின்னர் நான் உன்னை பார்க்க வேண்டும் என காதலி ரம்யா சொல்ல காதலன் ஜெயசூர்யா தான் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு நான் உன் வீட்டுக்கு வருகிறேன் எனக்கூறிய காதலி ரம்யா வீட்டின் மொட்டை மாடிக்கு வந்துள்ளார். அப்பொழுது, தன் காதலி வருகிறாள் என ஆசையாக காத்திருந்த காதலன் ஜெயசூர்யாவுக்கு காதலி ரம்யா டீ உடன் எலி மருந்து கலந்து கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
இதை அறியாமல் காதலி கொடுத்ததாக பாசத்துடன் நினைத்து காதலன் ஜெயசூர்யா டீயை குடித்தவுடன், குடித்து முடித்து விட்டியா என்ன காதலி ரம்யா கேட்க காதலன் தான் குடித்துவிட்டேன் எனக் கூறவே, அதில் எலி மருந்து கலந்து கொடுத்து விட்டேன் என்னையே வேணாம் என்று சொல்கிறாயா என காதலி கேட்டு உள்ளார். அதற்கு காதலன் சும்மா சொல்லாதே நான் உண்மையில் டீயை குடித்து விட்டேன். உண்மையை சொல்லு என கேட்கபோது, உண்மையில் நான் நீ குடித்த டீயில் எலி மருந்து கலந்து விட்டேன் என வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.
அதற்கு காதலன் தான் உண்மையில் அந்த டீயை குடித்து விட்டேன் விளையாட அதை என கேட்டு உள்ளார். உடனே தொடர்பை துண்டித்த காதலி என்ன செய்வது என்று திகைத்த காதலன் அரை மணி நேரத்தில் மூக்கில் புகை வந்து உடல் உபாதைகள் ஏற்பட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உடன் இருந்த நண்பர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபொழுது, அங்கு நடந்ததை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் விசாரித்த போலீசார் காதலன் ஜெயசூர்யாவை தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். என்பதற்காக தான் தான் குடித்து விட்டேன் என காதலி whatsapp குறுஞ்செய்தி அனுப்பியதையும் மறைத்து பேசி உள்ளார்.
விழுப்புரம் முந்தியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிப்பதற்கு வசதிகள் இல்லாததால் தொடர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் காதலன் ஜெயசூர்யாவை கொண்டு வந்து சேர்த்து உள்ளனர்.
ஜெயசூர்யாவை சென்னை ஸ்டான்லி அரிசி மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பரிசோதனை செய்ததில் காதலன் ஜெயசூர்யாவுக்கு சிறுநீரகமும் செயலிழந்து போய் இருப்பதும் மஞ்சை காமாலை வந்திருப்பதும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிந்து கொண்டனர்.
இதனால் ஒரு மாதமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் காதலன் ஜெயசூர்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை காதலன் ஜெயசூர்யா உயிர் பிழைப்பார் என மருத்துவர்கள் தெரிவிக்காத நிலையில் காதலியால் தன் உயிருக்கே தற்பொழுது விளைவு ஏற்பட்டுள்ளதால் அங்கு வழக்கு பதிவு செய்த போலீசார் எழும்பூர் மேஸ்டேட் முன்னிலையில் காதலன் ஜெயசூர்யாவிடம் வாக்குமூலம் பெற்று சென்று உள்ளனர் அப்பொழுதுதான் ஜெயசூர்யா தனக்கு காதலியால் என்ன ஏற்பட்டது என்பதை குறித்து முழுமையாக தெரிவித்துள்ளார்.
இருவரும் காதலித்த நிலையில் காதலி செய்த சிறு விளையாட்டுத்தனமான வேலையால் 24 வயதில் சட்டக் கல்லூரி படித்து வந்த காதலனுக்கு தற்பொழுது உயிருக்கு போராடிவரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்