Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிறுநீர் நாற்றத்தில் பணியாற்றும் கோட்டை உதவி ஆணையர் அலுவலக போலீசார். கமிஷனருக்கு மநீம மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வேண்டுகோள் .

0

'- Advertisement -

திருச்சி மக்கள் நீதி மய்ய கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

 

திருச்சி கோட்டை காவல் உதவி ஆணையர் அலுவலகமா ….? இல்லை குப்பை தரம் பிரிக்கும் மய்யமா….?

 

திருச்சி மாநகர காவல் எல்லையில் மரக்கடை பகுதியில் அமைந்துள்ளது திருச்சி கோட்டை காவல் உதவி ஆணையர் அலுவலகம். இந்த வளாகத்தில் தான் காவல் உதவி ஆணையர் அலுவலகம் மட்டுமல்லாது காந்தி மார்கெட் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதனால் காவல் உதவி ஆணையர் வளாகத்தை நாம் ஏன் சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ…? இன்று மேற்படி காவல் உதவி ஆணையர் அலுவலக வளாகம் குப்பையும் கூளமுமாக பார்ப்பதற்கே ஆபாசமாக உள்ளது.

 

இது மட்டுமல்ல மேற்படி அலுவகத்திற்கு மதில் சுவருக்கு வெளியே தொடர்ந்து சரக்கு லாரிகள் நிறுத்தப்படுவதால் அந்த மறைவிடத்தை பயன்படுத்தி கொண்டு சிலர் தொடர்ந்து சிறுநீர் கழிக்கப்பதால் ஏற்படும் துர்நாற்றம் காவல் நிலையம் வரை நீள்கிறது. ஆனால் பொதுமக்கள் தான் மூக்கை மூடிகொள்கிறார்கள். ஆனால் அங்கு பணியாறும் காவலர்களுக்கு பழகிவிட்டது போல…?

 

மேலும் உதவி ஆணையர் அலுவலகம் முன்பாக முறையற்று நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் அலுவலகத்திற்கு நடந்து செல்லவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த அளவிற்கு இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளன.

இதற்கு முன்பு மேற்படி உதவி ஆணையர் அலுவலத்தில் காவல் துணை ஆணையருக்கான [குற்றம் மற்றும் போக்குவரத்து] அலுவலகமாக இருந்ததால் தினம், தினம் சுத்தம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

 

தற்பொழுது பீமநகர் பகுதிக்கு துணை ஆணையர் அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

 

மேலும் தினம் தோறும் பல்வேறு பொதுமக்கள் வந்து செல்லும் கோட்டை காவல் உதவி ஆணையர் மற்றும் மிக முக்கியமான சட்டம் ஒழுங்கு காவல் நிலைய வளாகம் இன்று இப்படி கேட்பாறற்று குப்பையும், கூழமுமாகயிப்பதை பார்க்க கஷ்டமாக உள்ளது.

எனவே திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக மேற்படி அலுவலகத்தை தூய்மைபடுத்துபவதோடு தொடர்ந்து பராமரிக்க சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம் என கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியுள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.