Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

2026-ல் ஆட்சி மாற்றம் உறுதி. திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி.

0

'- Advertisement -

 

2026 -ல் ஆட்சி மாற்றம் உறுதி :

எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய பாடுபட வேண்டும்.

திருச்சி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேச்சு.

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன்
கோவில் அருகில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமை உரையாற்றினார் .

பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, கலைவாணன், புத்தூர் ராஜேந்திரன்,பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள் ஆகியோர் வரவேற்புரையாற்றினார்கள்.கூட்டத்தில் வக்கீல்கள் முல்லை சுரேஷ் முத்துமாரி,சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வைத்தார்கள்.கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் சோபா சோழன்,அதிமுக மகளிர் அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி சிறப்புரையாற்றினர்.அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு எப்படிப்பட்ட ஆட்சியை கொடுத்து வருகிறது என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.ஆனால் அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கொண்டு வந்தார்கள்.அதுபோல் திமுக ஆட்சியில் ஏதேனும் மக்கள் நலன் திட்டங்களை கூற முடியுமா?எங்கு பார்த்தாலும் பாலியல் தொல்லை, கஞ்சா விற்பனை,விலைவாசி உயர்வு சொத்துவரி, தண்ணீர் வரி உயர்வு இப்படி மக்களை வாட்டி வதைக்கும் இந்த திமுக அரசை அகற்றும் காலம் விரைவில் வரவுள்ளது.இந்த திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் வருகின்ற 2026 -ம் ஆண்டில் மாற்றம் வரவேண்டும்.
எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் .அதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநிலதுணைச் செயலாளர் அரவிந்தன்,
ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன்,
மாவட்ட பொருளாளர் ராஜசேகரன்,திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு. அம்பிகாபதி, ஜெ. பேரவை துணைச் செயலாளர் சிந்தை முத்துக்குமார்,
பொதுக்குழு உறுப்பினர் பாலக்கரை சதர்,
அணி நிர்வாகிகள் எம்ஜிஆர் மன்றம் வெல்ல மண்டி சண்முகம்,இளைஞர் அணி ரஜினிகாந்த்,இலக்கிய அணி, பாலாஜி, ஐ.டி. பிரிவு வெங்கட் பிரபு, சகாபுதீன், ஜான் எட்வர்ட், ஏடிபி ராஜேந்திரன்,சிறுபான்மை பிரிவு தென்னூர் அப்பாஸ்,இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர்கள் சில்வர் சதீஷ்குமார்,
டி.ஆர்.சுரேஷ் குமார்,மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் கருமண்டபம் சுரேந்தர்,இன்ஜினியர் ரமேஷ்,
எனர்ஜி அப்துல் ரகுமான், புத்தூர் பாலு, சண்முகம், எடத்தெரு பார்த்திபன், கலைப் பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி, பேராசிரியர் தமிழரசன்,முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், வக்கீல் கௌசல்யா, ரமணிலால் ,
வசந்தம் செல்வமணி, டிபன் கடை கார்த்திகேயன், டாஸ்மார்க் பிளாட்டோ,
எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார்,
கிராப்பட்டி கமலஹாசன்,பூக்கடை முத்துக்குமார், கல்லுக்குழி முருகன்,
ஆருண், செல்லப்பன், கே.டி.வி ஆனந்தராஜ்,அப்பாகுட்டி, ,நார்த்தாமலை செந்தில்குமார், அலெக்ஸ் உடையான் பட்டி செல்வம், வாழைக்காய் மண்டி சுரேஷ், உறந்தை மணிமொழியன்,ஜெயக்குமார்,
தலைமை கழக பேச்சாளர்கள் ஆரி, பொம்மாசி
பாலமுத்து, சிந்தை ராமச்சந்திரன் மற்றும்,டைமன் தாமோதரன் நத்தர்ஷா,காஜா பேட்டை சரவணன் சிங்கமுத்து, குருமூர்த்தி,சரவணன், வெல்லமண்டி கன்னியப்பன்,
சீனிவாசன்,அக்பர் அலி,கிதிர்முகமது, நாகூர் கனி, நஸ்ருதீன்,கீழக்கரை முஸ்தபா,
தினகரன் எடத்தெரு பாபு, ரபீக் அன்னை நகர்
ஜெரால்டு,இன்ஜினியர் மணிவண்ணன், ஐ.டி நாகராஜ்,கார்த்திக், தில்லை விஸ்வா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில்
தில்லை நகர் பகுதி அவைத் தலைவர் அக்பர் அலி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.