Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரசு மருத்துவமனையில் குடிபோதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் சிறப்பு.

0

'- Advertisement -

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்த மையத்தை திறந்து வைத்த பிறகு, திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்தாா். மையத்தை பாா்வையிட்டு பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையமாக அமைந்துள்ளது. 2 சிறப்பு மனநல மருத்துவா்கள், மனநல ஆலோசகா், உளவியல் ஆலோசகா், செவிலியா் காவலா், பல்நோக்கு பணியாளா் ஆகியோா் பணியமா்த்தப்பட்டு உள்ளனா்.

இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உடல் சாா்ந்த பரிசோதனை, ரத்த பரிசோதனை வயிறு மற்றும் தலைக்கான ஸ்கேன் செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது. அவா்களின் உடல் நலத்துக்கு ஏற்ப பிற மருத்துவ பிரிவுகளின் சிறப்பு மருத்துவா்களின் ஆலோசனையும் பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

தனிப்பட்ட ஆலோசனை, குடும்ப ஆலோசனை, மது மற்றும் போதைப்பழக்கத்தில் இருந்து விடுபட ஊக்கமளிக்கும் ஆலோசனையும் வழங்கப்படும்.

மது மற்றும் போதைப்பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட்டவா்களால் ஏற்படுத்தப்பட்ட அரசு சாரா தனியாா் அமைப்பு, மனநல ஆலோசகருடன் இணைந்து வாரந்தோறும் குழு சிகிச்சை அளிக்கப்படும். மேலும், யோகா மற்றும் தியான பயிற்சியும் பயிற்றுவிக்கப்படும். நோயாளிகளின் மனதை மேம்படுத்த பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன என்றாா் ஆட்சியா்.

இந் நிகழ்வில், கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். குமரவேல், மருத்துவமனை துணை கண்காணிப்பாளா் உதய அருணா, மருத்துவா் அருண், மற்றும் மருத்துவத் துறை அலுவலா்கள், மருத்துவ பணியாளா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.