Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

43 ஆண்டுகளாக எனது பெயரில் இருந்த மனையை அபகரித்து, கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் மனு.

0

'- Advertisement -

திருச்சியில் நில அபகரிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி கூத்தைபார் மூலத் தெருவில் வசித்து வரும் நாகராஜன் (வயது 78) என்பவர் நில அபகரிப்பு தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி குண்டூர் அயன்புத்தூர் கிராமம் சர்வே எண் 20816B/ல், கடந்த 1982 ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் 5 சென்ட் நிலம் வாங்கியுள்ளேன். சுமார் 43 ஆண்டுகளாக என் பெயரில் இருந்த நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் மனை பிரிவு என பதிவு செய்து பிளாட் போட்டு விற்பனை செய்துள்ளனர். தொடர்ந்து கடந்த 19.02.25 அன்று நான் எனது நிலத்தை நில அளவையர் கொண்டு அளந்து நான்கு புறமும் எல்லை கல் நட்டு வைக்கும் பணியில் ஈடுபட்ட போது, அங்கு வந்த மாத்தூரை சேர்ந்த இளங்கோவன், சிவகுரு, மேத்தியூ மற்றும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் என்னை கெட்ட வார்த்தையால் திட்டி நிலத்தை விட்டு வெளியேறுமாறு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தேன்.அந்த புகாரினின் மீது இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஆகையால் நிலத்தை அபகரிப்பு செய்த மர்ம நபர்கள் மீது உடனடியாக நடவைக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.