Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் குறைக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட் விலை விபரம் …..

0

திருச்சி,
தமிழக அரசு உத்தரவின்படி அனைத்து ஆவின் பால் பாக்கெட் வகைகளும் தற்போது விலையிலிருந்து லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட பாக்கெட் புதிய விலைப்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் (ஆவின்) தலைவர் கார்த்திகேயன், பொதுமேலாளர் ரசிகலா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி ஆவின் மூலமாக நாளொன்றுக்கு 4 லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் பால், உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.

தினசரி விற்பனையாக 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

குறைக்கப்பட்ட பால் வகைகளின் லிட்டர் ஒன்றின் புதிய விலை பட்டியல் விவரம் (பழைய விலை அடைப்பு குறிக்குள்) வருமாறு:-

1.சமன் படுத்தப்பட்ட பால் கார்டுக்கு புதிய விலை ரூ.37 (ரூ.40), ரொக்கம் புதிய விலை ரூ.40 (ரூ.43).

2. நிலைப்படுத்தப்பட்ட பால் கார்டுக்கு புதிய விலை ரூ.42 (ரூ.45).ரொக்கம் புதிய விலை ரூ.43 (ரூ.46).

3.சமச்சீர் செய்யப்பட்ட நிலைப்படுத்திய பால் ரொக்கம் புதிய விலை ரூ.47 (ரூ.50).

4. நிறை கொழுப்பு பால் ரொக்கம் புதிய விலை ரூ.49 (ரூ.52).
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.