திருச்சி பாலக்கரையில் பயங்கர ஆயுதங்களுடன், போதை மாத்திரைகளுடன் ஆட்டோவில் அமர்ந்திருந்த மர்மகும்பல்.
ஆட்டோ உடைப்பு – 2 பேர் கைது .

திருச்சி பாலக்கரை கேம்ஸ் டவுன் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் அருண் பிரான்சிஸ் ராஜ் (வயது 39).இவர் தனது வீட்டு அருகே நின்ற ஆட்டோவில் ஆறு பேர் கொண்ட கும்பல் அமர்ந்து இருந்ததை பார்த்து சத்தம் போட்டார். அப்போது அந்த கும்பல் பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.
அந்த கும்பல் அருண் பிரான்சிஸ் ராஜை மிரட்டியுள்ளனர்.பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று விட்டார். இந்நிலையில் அந்த ஆறு பேர் கொண்ட கும்பல் எங்களையே கேள்வி கேட்கிறாயா என கூறி ஆட்டோவை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அருண் பிரான்சிஸ் ராஜ் பாலக்கரை காவல் நிலையத்தில்
புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வழக்கு பதிந்து மேத்தியூ (வயது 25), முகமது சபிக் கனி ( வயது 22) ஆகிய இரண்டு பேரை கைது செய்தார்.
மேலும் அந்தோணி ,சஞ்சய், சிம்சன், ராபர்ட் வின்ஸ்லி ஆகிய நான்கு பேரை தேடி வருகிறார். கைதான நபர்களிடமிருந்து 96 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் ஆயுதங்களுடன் தப்பியோடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதே போல் திருச்சி இ.பி.ரோடு பகுதியில் மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரிடம் கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டி பனம் பறித்ததாக சிந்தாமணியை சேர்ந்த தினேஷ் குமார் என்ற ரவுடியை கோட்டை போலீசார் கைது செய்தனர்.