Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

10 ரூபாய் நோட்டு ரூ.6.90 லட்சத்துக்கு ஏலம். தந்தையின் டிரங் பெட்டியில் இருந்த பழைய 500 ரூபாய் நோட்டு. விற்பனைக்காக சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வாலிபருக்கு கிடைத்தது….

0

'- Advertisement -

 

நெட்டிசன் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முந்தைய ரூபாய் நோட்டு ஒன்றை தனது தந்தையின் டிரங் பெட்டியில் கண்டுபிடித்துள்ளார்.

 

அது என்ன மதிப்பு இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட அவர் அதைப் போட்டோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ரூபாய் நோட்டு குறித்து அவருக்கே தெரியாத பல தகவல்களைக் கூறிய நெட்டிசன்கள், அதன் மதிப்பு எவ்வளவு என்பதையும் விளக்கியுள்ளனர்.

 

நமது நாட்டில் ரூபாய் நோட்டுகள் பல ஆண்டுகளாகவே புழக்கத்தில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இதுபோல புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளின் ஆயுசு சில காலம் தான்.

 

சில ஆண்டுகளிலேயே அவை மிக மோசமான நிலைக்கு மாறிவிடுவதால், ரிசர்வ் வங்கியே அந்த நோட்டுகளைத் திரும்பப் பெற்று புதிய நோட்டுகளை அச்சிடும். இதுதான் வழக்கமான பிராசஸ்.

 

Suresh

ஆனால், சில ரூபாய் நோட்டுகள் மட்டும் எங்காவது அப்படியே இருந்துவிடும். இவை ஆண்டுக் கணக்கில் புழக்கத்திற்கு வராமலேயே இருப்பதால் பத்திரமாக இருக்கும். சில நேரங்களில் இதுபோன்ற பழைய ரூபாய் நோட்டுகளைப் பழங்கால பொருட்களைச் சேகரிப்பவர்கள் ஆர்வமாக வாங்குவார். அப்படி தான் இங்கு ஒருவருக்குத் தனது தந்தையின் பழைய டிரங் பெட்டியில் பழைய ரூ.500 நோட்டு கிடைத்துள்ளது.

 

அது 50 ஆண்டுகளுக்கு முந்தைய ரூபாய் நோட்டு என்று நினைத்த அவர், அதை போட்டோவாக எடுத்து ரெட்டிட் தளத்தில் பதிவிட்டுள்ளார். அது பெரிய தொகைக்கு ஏலம் போகும் என்ற நம்பிக்கையில் அவர் அந்த போட்டோவை பதிவிட்டிருந்தார். மேலும், அதன் மதிப்பு என்னவாக இருக்கும்.. யாராவது வாங்க முன்வருவார்களா என்றும் கேட்டிருந்தார்.

 

இது தொடர்பாக அவர் ரெட்டிட் தளத்தில், “1970களில் இருந்த இந்த பழைய ரூ.500 இந்திய ரூபாய் நோட்டு எனது அப்பாவின் பழைய டிரங் பெட்டியில் கிடைத்தது. இது கொஞ்சம் சேதம் (ஒரு பகுதி காணவில்லை) அடைந்துள்ளது உண்மை தான். ஆனாலும், பழங்கால பொருட்களைச் சேகரிப்போர் இதற்கு எவ்வளவு தொகை தருவார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

அவர் இந்த போஸ்ட்டை போட்ட உடனே நெட்டிசன்கள் பலரும் அவருக்கு விளக்கங்களை அளித்தனர். அதாவது 500 ரூபாய் நோட்டு முதன்முதலில் 1987ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டனர். எனவே இது 50 ஆண்டுகள் பழமையானது இல்லை என்று குறிப்பிட்டனர். மேலும், அந்த ரூபாய் நோட்டில் ஆளுநர் சி ரங்கராஜனின் கையெழுத்து இருப்பதையும் சுட்டிக்காட்டினர். சி ரங்கராஜன் 1992 முதல் 1997 வரை தான் ஆர்பிஐ கவர்னராக இருந்தார். எனவே, இந்த ரூபாய் நோட்டு அதிகபட்சம் 30 ஆண்டுகள் மட்டுமே பழமையானது என்று நெட்டிசன்கள் குறிப்பிட்டனர்.

 

நெட்டிசன்கள் மேலும் கூறுகையில், “இது நீங்கள் நினைப்பது போல 50 ஆண்டுகள் எல்லாம் பழமையானது இல்லை.. மிகத் தாமதமாகவே அச்சிடப்பட்ட ஒன்று. 1970களில் 500 ரூபாய் நோட்டுகளே இல்லை. இன்னும் 10, 20 ஆண்டுகள் இருந்தால் மட்டுமே இந்த ரூபாய் நோட்டுக்கு மதிப்பு கிடைக்கும். இது மிகவும் சேதமடைந்து இருப்பதால் இப்போது யாரும் இதை வாங்க ஆர்வம் காட்ட மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.

 

மேலும், 2016-ம் ஆண்டுக்கு முந்தைய ரூ.500 நோட்டுகள் எதுவும் சட்டப்பூர்வமானவை அல்ல என்பதையும் குறிப்பிடும் நெட்டிசன்கள், இது சட்டப்பூர்வ மதிப்பு பூஜ்ஜியம் தான் என்கிறார்கள். ரூபாய் நோட்டு கிழிந்து இருப்பதால் யாரும் அதை வாங்க ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்பதால் அதை மாற்றிக் கொள்ளும்படியும் பலரும் அறிவுறுத்துகிறார்கள்.

 

கடந்த ஆண்டு, இதுபோல தான் ஒருவருக்கு 1918ம் ஆண்டில் அச்சப்பட்ட அரிய வகை ரூ.10 நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அது ரூ.6.90 லட்சத்துக்கும், மற்றும் ரூ.5.80 லட்சத்துக்கும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல தனக்கும் ஜாக்பாட் அடிக்கும் என்று நினைத்த இந்த நபருக்கு கடைசியில் மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே

Leave A Reply

Your email address will not be published.