25 -ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கொடியேற்று விழா
மாவட்டச் செயலாளர் சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன் கொடியேற்றினார்.
திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் 25 -ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு கொடியேற்று விழா இன்று திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவருமான சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது
தேமுதிக மாவட்ட செயலாளர் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பாரதிதாசன் தேமுதிக கட்சிக்கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மணிகண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மலைப்பட்டி ஆர். சக்திவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் செங்குறிஞ்சி ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் மணிமாறன், தர்மேந்திரன் பூங்கொடி, பாலு அருவாக்குடி, செல்வராஜ், மட்டபாறைப்பட்டி பாலசுப்ரமணி, எசனைபட்டி பாலு ஹவுசிங் போர்டு பாண்டி மற்றும் திரளான நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.