தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்சி வழி விடு வேல்முருகன் கோயிலில் 8ம் ஆண்டாக அன்னதானம் வழங்கிய கொட்டப்பட்டு அபிராமி வெல்டிங் ஒர்க்ஸ் நிறுவனத்தினர்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் இயல்புகள் சிறப்பாக நடைபெற்றது . நடிகர்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .
இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவிலில் கொட்டப்பட்டு சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே உள்ள வழிவிடு வேல்முருகன் கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தைப்பூச விழாவை முன்னிட்டு முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர் , மேலும் திருச்சி கொட்டப்பட்டில் செயல்பட்டு வரும் அபிராமி வெல்டிங் ஒர்க்ஸ் சார்பில் தொடர்ந்து 8-ம் ஆண்டாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் அபிராமி வெல்டிங் ஒர்க்ஸ் நிறுவனர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கி அன்னதானம் வழங்கினார்.
இந்த நிகழ்வில் அவரது மனைவி வனிதா மற்றும் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.