Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 6.1/2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் .

0

'- Advertisement -

Ad banner

இன்று திருச்சி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.

 

இன்று புதன்கிழமை (12.02.2025) ம் தேதி மதியம் 2 மணி அளவில் குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ரயில் நிலைய நடைமேடை எண் 1 ல் வந்து நின்ற சமயம் அந்த வண்டியை திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்த போது முன்பக்க பொதுப்பட்டி கழிவறை அருகே கேட்பாரற்றுக் கிடந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆறரை கிலோ புகையிலை பொருட்களை சிறப்பு உதவியாளர் சுப்பிரமணி, அபிராமி மற்றும் காவலர்கள் கைப்பற்றி திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

இந்த புகையிலை பொருட்களை கொண்டு வந்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.