திருச்சி பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் கடையின் 117 வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடிகர் விக்ரம் தொடங்கி வைத்தார்.
திருச்சி பி.ஜி. நாயுடு ஸ்வீட்ஸ் கடையின் 117 – வது ஆண்டு விழாவையொட்டி திருச்சி பாலக்கரை கிளையில் 1000 பேர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
திருச்சியில் உள்ள பிரபல இனிப்பகங்களில் பி.ஜி. நாயுடு ஸ்வீட்ஸ். திருச்சி பாலக்கரை பகுதியில் 116 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த ஸ்வீட் கடை தற்போது திருச்சியில் மட்டும் 35 இடங்களில் கிளையை தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மேலும் மதுரை பெரம்பலூர் புதுக்கோட்டை திண்டுக்கல் மற்றும் பட்டுக்கோட்டையில் தனது கிளையை தொடங்கி தனது சொந்தமான பால் பண்ணையில் இருந்து தயாரிக்கப்பட்ட நெய் பலகாரங்கள் அனைத்தும் நாவில் இனிப்பு சுவையை நிலைத்து நிற்க வைக்கும்.

அனைத்து வகையான கேக்களும் கொண்டு வரப்பட்டுள்ளது .
இந்நிலையில் இன்று பிஜே நாயுடு ஸ்வீட் கடையின் 117வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பாலக்கரை கிளை கடை அருகில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
இந்த அன்னதானத்தை நடிகர் வாசு விக்ரம் தொடங்கி வைத்தார். இனிப்பு பொங்கல், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம், மசாலா சுண்டல் என வகை வகையாக வழங்கப்பட்ட அன்னதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த விழாவில் பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் அமர்நாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .