கள்ளக் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் கைது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த
வேலுார் வாலிபர் கைது.
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷ நாட்களில் பல லட்சம் பேர் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திருச்சி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய நபர்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் அந்த மர்ம சாமி தொடர்பு கொண்ட செல்போன் எண்ணின் டவரை பார்த்தபோது, அது ஸ்ரீரங்கம் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
உடனே உஷாரான போலீசார் விரைந்து சென்று அந்த மர்ம ஆசாமியை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
விசாரணையில் கைதானவர் வேலுார் மாவட்டம் வாணியம்பாடி, திம்மம்பேட்டை, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 32) என்பது தெரிய வந்தது.
போலீசாரின் விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ஸ்ரீரங்கம் பகுதியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்ததும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் செந்தில்குமாருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.
கள்ளக் கதலியுடன்
ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரமடைந்த செந்தில்குமார் தனது செல்போன் எண்ணிலிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் பேசி மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. போதையில்
கள்ளக் காதலியை மிரட்டுவதற்காக
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாரா அல்லது வேறு ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடந்து வருகின்றனர்.
இது குறித்து ஸ்ரீரங்கம் சப் இன்ஸ்பெக்டர் சட்டநாதன் வழக்கு பதிவு செய்துள்ளார்.
கள்ளக் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் ரங்கநாதர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உளளது