

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பஸ் முன் பாய்ந்த வாலிபர் பலி
பஸ்சின் முன் பாய்ந்து 38 வயது மதிக்கதக்க ஆண் சாவு கன்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், வயலுார் கிராமம், கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 49), அரசு பஸ் டிரைவர். இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சை சென்னை நோக்கி இயக்கினார்.
பஸ் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் திடீரென பஸ்சின் சக்கரம் முன் அதிவேகமாக பாய்ந்தார். இதில் பஸ்சின் பின்பக்க சக்கரம் அவரது தலையில் ஏறி, இறங்கியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை திருச்சி தெற்குபோக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கோ அபிஷேகபுரம் கிராம நிரவாக அலுவலர் ராஜேஸ் அளித்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

