ஸ்கேட்டிங் போட்டியில் திருச்சி இரட்டையர்கள் சாதனை.
திருச்சி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் ஆறு வயது பிரிவில் தங்க பதக்கம் மற்றும் வெண்கல பதக்கம் பெற்ற இரட்டையர்கள்.
திருச்சி கே.கே. நகர் வடுகப்பட்டியில் அமைந்துள்ள ஹாக்கர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஸ்கேட்டிங் ரிங்க் சார்பாக நடத்தப்பட்ட போட்டியில் பதக்கங்களை வென்ற இரட்டையர்கள்.

எஸ் ஆர் எம் யூ தொழிற்சங்கத்தை சேர்ந்த பொன்மலை உதவி கோட்ட செயலாளர் வி. டேனியல் ராஜ் அவர்களின் இரட்டைக் குழந்தைகளான மகன் வி.டி.கெவின் விக்டர் , மகள் வி.டி. கென்சி ஆனி இவர்கள் 6 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாவட்ட அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்று தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.
சிறப்பாக விளையாடி பதக்கம் வென்ற குழந்தைகளை மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமென ரயில்வே அதிகாரிகள், நண்பர்கள் என அனைவரும் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர் .