உல்லாசமாய் இருக்க இடைஞ்சல். முதலாவது கள்ளக்காதலன் படுக்கொலை. இரண்டாவது கள்ளக்காதலுடன் இளம்பெண் கைது .
தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகர் பகுதியில் சார்ந்தவர் லேட் சுருளி வேல் என்பவரின் மகன் சதீஷ் (வயது 24), கம்பத்தில் உள்ள பலசரக்கடை ஒன்றில் சில மாதங்களுக்கு முன்பாக சதீஷ் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் வேலைக்குச் செல்லாமல் சுற்றி திரிந்துள்ளார்.
இந்நிலையில் சதீஷுக்கும் கம்பம் மஞ்சகுளம் சாலையில் உள்ள காம்பவுண்ட் வீட்டில் குடியிருந்து வரும் முதல்வன் என்பவரின் மனைவி நந்தினி (வயது 31) என்பவருக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
கணவன் முதல்வன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் . தனியாக வசித்து வந்த நந்தினியின்
வீட்டிற்கு அடிக்கடி சதீஷ்குமார் போய் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனை அறிந்த சதீஷின் தாய் அவரை கண்டித்து உள்ளார் . இருந்தாலும் அவர் தொடர்ந்து நந்தினி உடன் தொடர்பில் இருந்து உள்ளார் .
இந்நிலையில் கடந்த சில தினங்களாக நந்தினிக்கு புதிதாக கம்பம் உலக தேவர் தெருவை சார்ந்த பிரபாகரன் (வயது 27) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது .
இதன் காரணமாக நந்தினி, சதீஷ், பிரபாகரன் ஆகியோருக்கு உள்ளாக பிரச்சனை நிலவி வந்துள்ளது.

சம்பவத்தன்று நள்ளிரவில் சதீஷ் நந்தினி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பிரபாகரனும் நந்தினியும் இருந்துள்ளனர். இதனால் சதீஷுக்கும், பிரபாகரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டதாகவும், அப்போது அங்கு இருந்த கத்தி மற்றும் கண்ணாடி துண்டு ஒன்றை எடுத்து பிரபாகரன் சரமாரியாக சதீஷை மார்பு மற்றும் வயிறு பகுதிகளில் தாக்கியுள்ளார். சதீஷும் கண்ணாடி துண்டுகளை எடுத்து பிரபாகரனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இருவரும் ரத்த காயங்களுடன் இருக்க அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காயங்களுடன் இருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர் . அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சதீஷ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் நேற்று அதிகாலை வேளையில் உயிரிழந்தார்.
உயிரிழந்த சதீஷ் .
இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நந்தினி மற்றும் பிரபாகரன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முறையற்ற உறவின் காரணமாக வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.