இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டி. தமிழக வீரரின் அபார வீச்சினால் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.
கொல்கத்தா: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் இரவு நேரத்தில் பணிப்படைவு அதிகம் இருக்கும் என்பதினால் பந்து வீசு இயலாது என கருதி இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதேபோன்று இங்கிலாந்து அணியும் பேட்டிங்கில் தடுமாறியது. இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் முதல் மூன்று ஓவர்களிலேயே 2 விக்கெட்களை வீழ்த்தினார். சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணற வைத்தார்.
பின்னர் இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 133 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணி 12.5 ஓவர்களில் எல்லாம் எட்டியது.
அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 79 ரன்களை எடுத்தார். இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியில், அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் மட்டுமே அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். பட்லர் 44 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அதிக டாட் பால்களை ஆடினர். அவர்களால் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சந்திக்க முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் மற்ற பேட்ஸ்மேன்கள் ஜோஸ் பட்லருக்கு அதிக பந்துகளை சந்திக்க வாய்ப்பு அளித்து இருக்கலாம். அதற்கு மாறாக அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக ஆட முயன்று, அதில் தோல்வி அடைந்தனர். அதிக டாட் பால்களை ஆடினர். அதனால், முதல் ஆறு ஓவர்களில் 22 பந்துகளை சந்தித்து இருந்த ஜோஸ் பட்லர், அடுத்த 10 ஓவர்களில் 20 பந்துகளை மட்டுமே சந்தித்தார்.
முதல் 22 பந்துகளில் அவர் 34 ரன்கள் எடுத்திருந்தார். அதாவது பவர் பிளே ஓவரில் மட்டுமே அவர் 34 ரன்கள் சேர்த்திருந்தார். ஆனால், 16 வது ஓவரின் முடிவில் அவர் மொத்தமாக 42 பந்துகளை சந்தித்து 62 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். 7 வது ஓவர் முதல் 16 வது ஓவர் வரையிலான 10 ஓவர்களில் மற்ற பேட்ஸ்மேன்கள் 40 பந்துகளை சந்தித்து சொற்ப ரன்களை மட்டுமே எடுத்து வரிசையாக ஆட்டம் இழந்தனர்.
இந்த ஒரு தவறால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி மூன்று விக்கெட்களையும், அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் பட்டேல் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.
சிறப்பாக பந்துவீச்சு மூன்று விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இப்போ போட்டியின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.