பெரியபாளையம் அருகே சிறுவனை ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே 16 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது வீட்டின் அருகே வசித்து வரம் வினோதினி (வயது 24) என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் வினோதினி 11ஆம் வகுப்பு மாணவனை ஆசை வார்த்தை கூறி காதலித்து கடந்த டிசம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியூருக்கு அழைத்து சென்றுள்ளார்.
சிறுவனை பல இடங்களிலும் தேடியும் காணாத பெற்றோர் தனது மகனை காணவில்லை என பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சிறுவன் காணாமல் போன புகார் குறித்து வழக்கு பதிவு செய்து பெரியபாளையம் போலீசார் காணாமல் போன பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் சிறுவனின் வீட்டின் அருகில் வசிக்கும் பெண் சிறுவனை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வெளியூர் அழைத்துச் சென்று இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர் சிறுவனுடன் பதுங்கி இருந்த ஊருக்கு சென்று சிறுவனை மீட்டு இளம்பெண்ணை கைது செய்தனர். தொடர்ந்து சிறுவனை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வினோதினியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருவள்ளூர் மகிலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.