திமுக அமைச்சர் ஒருவராவது சரியாக கூறிவிட்டால் நான் அரசியலை விட்டு விலக தயார். திருச்சியில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரிந்துவிட்டது, விலைவாசி உயர்ந்துவிட்டது :
2026 -ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சிக்கட்டிலில் அமரும்
திருச்சி பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேச்சு.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் எடமலைப்பட்டிபுதுாரில் நேற்று மாலை நடைபெற்றது.
மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் கலைவாணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அதிமுக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் பேசியதாவது:
தமிழகத்தில் தற்போதைய மக்கள் விரோத திமுக ஆட்சியை திராவிடமாடல் ஆட்சி எனக் கூறி முதல்வரும், அமைச்சர்களும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். திராவிட மாடல் என்றால் என்ன என்று ஒரு திமுக அமைச்சர் சரியாக கூறிவிட்டால் அரசியலை விட்டே நாங்கள் விலகத் தயார். அதுகுறித்து திமுக அமைச்சர்கள் என்னிடம் நேருக்கு நேராக விவாதிக்க தயாரா?
2021ல் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து அதனை நிறைவேற்றாமல், அளிக்காத வாக்குறுதிகளாக மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி, குடிநீர் வரி என அனைத்தையும் உயர்த்திவிட்டனர். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரிந்துவிட்டது, விலைவாசி உயர்ந்துவிட்டது. இதுபோன்று மக்கள் திமுக ஆட்சியில் தினம் தினம் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அதனால், திமுக ஆட்சியை விட்டு அகற்ற தயாராகிவிட்டனர்.
திமுக ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், மறு முறை வராது. அதன்படி, 2026ல் படுதோல்வியை சந்திக்க திமுக தயாராகிவிட்டது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்றும் இயக்கம் அதிமுக. அந்த இயக்கம் எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைக்க 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும், வாய்ப்பு அளிப்பார்கள்’’.நிச்சயம் எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமரும்.
,இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில்,அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை திருஞானம், ஜெ.பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் மாநில செயலாளர் துணைச் செயலாளர் ஜோதிவாணன்,
மாவட்டச் துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன் பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி,எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,புத்தூர் ராஜேந்திரன்,அன்பழகன், சுரேஷ்குப்தா,ரோஜர், ஏர்போர்ட் விஜி ,
ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோ.கு. அம்பிகாபதி,
இலக்கிய அணி பாலாஜி,ஐ.டி பிரிவு வெங்கட் பிரபு, வக்கீல் அணி துணைத் தலைவர் முத்துமாரி,
வட்டச் செயலாளர்கள் வசந்தம் செல்வமணி, அமீர் பாஷா, சிங்கார வேலன், கிராப்பட்டி கமலஹாசன், சரவணன், பாலு மகேந்திரன்,எடத்தெரு பாபு, ராஜ்மோகன், இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ் குமார்,
நிர்வாகிகள் பார்த்திபன், பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், அக்பர் அலி, உறையூர் சாதிக், உறந்தை மணிமொழியன், சக்கரவர்த்தி நாட்ஸ சொக்கலிங்கம் இன்ஜினியர் ரமேஷ்,மார்க்கெட் பிரகாஷ்,ஒத்தக்கடை மகேந்திரன், டிபன் கடை கார்த்திகேயன்,
கருமண்டபம் சுரேந்தர்,மாணவரணி ரஜினிகாந்த்,உடையான்பட்டி செல்வம், கே.பி.இராமநாதன், ரமணி லால், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் வக்கீல் சி.முத்துமாரி நன்றி கூறினார்.