திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடம் 55 கிராம் கஞ்சா பறிமுதல்.
நான்கு கைதிகள் மீது வழக்கு பதிவு.
திருச்சி மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர்.
இந்த நிலையில் அடிக்கடி போலீசார் சிறையில் அதிரடி சோதனை நடத்தி கைதிகளிடமிருந்து கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்வது வழக்கம்.
ஆனால் இந்த முறை சிறை வளாகத்தில் கைதியிடமிடருந்து கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 13 ந் தேதி திருச்சி மத்திய சிறை வளாகத்தின் பார்வையாளர்கள் மனு அளிக்கும் இடம் அருகில் உள்ள கழிவறை அருகே உள்ள ஒரு குழாயில் நீல நிறத்தில் 3 பொட்டலம் சுற்றி கிடந்தது. இதனை பாலு , துரைராஜ் ஆகிய 2 கைதிகள் தெரிந்து கொண்டு அவர் சிறை வளாகத்தில் வெளியே தோட்ட வேலை செய்ய வந்த பொழுது அந்த கஞ்சா பொட்டலத்தை எடுத்து தனது சட்டையில் மறைத்து சிறைக்குள் செல்ல முயன்றனர்.
அப்பொழுது இதனைப் பார்த்த சிறை அதிகாரி சண்முகசுந்தரம் பாலு, துரைராஜ் ஆகியோரை அழைத்து அவரிடம் சட்டையில் என்ன மறைத்து வைத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு பாலு முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
இதையடுத்து சிறை அதிகாரி பாலுவை முழுவதுமாக சோதனை செய்தார். அப்பொழுது அவர் சட்டையில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்தார்.இதையடுத்து கைதி துரைராஜ், பாலுவிடம் சிறைத்துறை அதிகாரி சண்முகசுந்தரம் கஞ்சா எப்படி வந்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
திருச்சி மத்திய சிறையில் பாலு,துரைராஜ் சதீஷ், ஆனந்த் ஆகிய மூன்று கைதிகள் சிறையில் உள்ளனர்.இதில் ஆனந்த் மட்டும் கடந்த வாரம் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவர் சிறையில் இருந்து விடுதலை ஆகும் பொழுது நண்பர்கள் பாலு, துரைராஜ், சதீஷ் ஆகிய மூன்று பேரும் தங்களுக்கு வெளியிலிருந்து கஞ்சா வாங்கிக் கொண்டு சிறைக்கு வந்து பார்த்து தருமாறு கூறியுள்ளனர்.இதை அடுத்து சிறையில் இருந்து வெளியே சென்ற ஆனந்த் கஞ்சாவை மூன்று பொட்டலங்களாக பிரித்து எடுத்துக் கொண்டு சிறை வளாகத்திற்கு வந்து மேற்கண்ட 3 கைதிகளை பார்க்க மனு கொடுத்துள்ளார் ஆனால் போலீசார் அவரை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை.இதை எடுத்து ஆனந்த் சிறை வளாகத்தில் உள்ள கழிவறை அருகே மூன்று பொட்டலங்களையும் வைத்துவிட்டு சென்றுவிட்டார். அப்பொழுது சிறை வளாகத்தின் வெளி பகுதியில் தோட்ட வேலைகளை செய்து கொண்டிருந்த பாலு,துரைராஜ் ஆகிய இருவரும் பார்த்து கஞ்சா பொட்டலங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சிறை வளாகத்திற்குள் செல்லும் பொழுது சிக்கிக்கொண்டனர் என தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரி சண்முகசுந்தரம் கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் போரில் கே.கே நகர். காவல் நிலைய போலீசார் 4 பேர் மீது
வழக்கு பதிந்து, அவர்களிடம் இருந்து 55 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இந்த சம்பவம் திருச்சி சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.