மலேசியா நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்து உள்ளார்.
அந்த புகாரில், “சென்னை வளசரவாக்கம் பிரகாசம் சாலையைச் சேர்ந்த தமிழரசி (வயது 42), மதுரவாயல் கடம்பாடியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அவரது தாய் கோவித்தம்மாள் (62) ஆகியோர் வளசரவாக்கத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் மலேசியாவில் உள்ள எனது நிறுவனத்துக்கு 12 ஆயிரம் மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக கூறி ரூ.10.61 கோடி வரை வங்கி மூலமாக பெற்றுக் கொண்டனர்.
ஆனால், உறுதி அளித்தபடி சர்க்கரை அனுப்பி வைக்காமல், சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டதாக போலி ஆவணங்களை அனுப்பி ஏமாற்றினர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த தொழிலதிபர் காவல்துறையிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையடுத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஹேமா மலேசியாவில் உள்ள, “அலைடு குரூப்” என்ற தனியார் நிறுவனத்திற்கு, சென்னையில் இருந்து, 12,000 மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக ஒப்பந்தம் செய்து, 10.61 கோடி ரூபாய் வாங்கி தமிழரசி மோசடி செய்துள்ளது உறுதியானது.

இதையடுத்து, தமிழரசி மற்றும் அவரது அம்மா கோவிந்தம்மாளை கைது செய்தனர்.
அதேபோல மற்றொரு சம்பவம்:
தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் மோசடியில் ஒரு பெண் சிக்கி, உள்ளார்.
தேனி அரண்மனைப்புதுார் பசுமை நகரை சேர்ந்தவர் சுகந்தி.
இவரது அப்பா பாஸ்கரன் மூலம், லட்சுமிபுரம் விஜயகுமார் என்பவர் சுகந்திக்கு அறிமுகமாகியிருக்கிறார்.
சுகந்தியின் வீட்டை ரூ.63.66 லட்சத்திற்கு கிரையம் செய்து தருவதாக விஜயகுமார், அவரது மனைவி கோகிலா இருவருமே சுகந்தியிடம் சொல்லியிருக்கிறார்கள். இதனால், சுகந்தியும், அந்த பணத்தை வழங்கி கிரையம் செய்தார்.
அதே நேரத்தில் வீட்டை தங்களது மகள் காவியாவிற்கு தானசெட்டில்மெண்டாக விஜயகுமார், கோகிலா எழுதி தந்துவிட்டார்களாம், இதனால் அதிர்ந்துபோன சுகந்தி, 3 பேர் மீதும் எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்ததில்,கோகிலா இதற்கெல்லாம் மூளையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, விஜயகுமாரை கடந்த மாதம் கைது செய்திருந்த நிலையில், கோகிலாவையும் தற்போது கைது செய்துள்ளனர்.