திருச்சி ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம். தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…
ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி.
திருச்சி டவுன் ரயில் நிலையத்துக்கும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கும் இடையே சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது உடனடியாக தெரியவில்லை.
ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ஏதாவது ஒரு ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இவர் சிமெண்ட் கலர் முழுக்கை சட்டை, கருப்பு நிற சிகப்பு கோடுபட்ட முண்டா பனியன், கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் மற்றும் இடது முன்னங்கையில் இதய வடிவில் கத்தி பாய்வது போல டாட் டூ குத்தியுள்ளார்.
இதுகுறித்து திருச்சி ஜங்ஷன் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவர் பற்றி தகவல் தெரிந்தோர் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரியிடம் தகவல் தெரிவிக்கவும் .
தொடர்புக்கு செல் எண் : 86672 59844,94434 72524