குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்: திருச்சி கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்கள் பங்கேற்பு.
திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல் , இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்பு, வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களை திருடி செல்லுதல் போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது குறிப்பாக பெரிய கடை வீதியில் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பெரிய கடை வீதி பொதுமக்களிடம் திருச்சி கோட்டை காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பெரியசாமி, குற்றப்பிரிவு ஆய்வாளர் அருள்ஜோதி ஆகியோர் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து கலந்துரையாடினர் .
இந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர் சங்கர் , பகுதி செயலாளர் ஏ.ஜி. பாபு, 22வது வட்ட செயலாளர் செந்தில், கே.சி.ஆறுமுகம் உள்ளிட்டோர் பொதுமக்கள் சார்பாக குற்ற சம்பவங்கள் குறித்து எடுத்துரைத்தனர் .
இதனை தொடர்ந்து பேசிய காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி பொதுமக்களிடம் பேசுகையில் :-
குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பொதுமக்களும் ஒரு வகையில் துணை போகிறார்கள் . குற்றம் நடந்த உடன் அப்பகுதியில் சென்று விசாரணை மேற்கொண்டால் யாரும் சரியான தகவல் கூறுவதில்லை அப்படியே குற்றவாளியை கண்டுபிடித்து அடையாளம் காட்ட சொன்னாலும் யாரும் காட்டுவதில்லை , போலீசார் அழைத்தாலே கோர்ட்டுக்கு அலைய வேண்டும் என யாரும் சாட்சி சொல்ல வருவதில்லை இதையே குற்றவாளிகள் சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர்.
மேலும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஜாமினில் எடுப்பதற்காகவே சில வழக்கறிஞர்கள் உள்ளனர் , இதனால் குற்றம் செய்யும் நபர்கள் அடுத்த நாளே ஜாமினில் வெளிவந்து மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் . இதையும் மீறி ஜாமினில் விடவில்லை என்றால் அரசியல் அழுத்தம் வேறு உள்ளது .
எனவே பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள இரவு நேரத்தில் தங்க நகைகள் அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும் , முடிந்தவரை தனியாக நடமாடும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும் , இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களை உறுதியான இரும்பு சங்கிலியால் இணைத்து பூட்டி வைக்க வேண்டும் இப்படி நம்மளே முடிந்த அளவு தற்பாதுகாப்புவுடன் செயல்பட்டால் முடிந்த அளவு குற்றங்களை குறைக்கலாம்.
கோட்டை காவல் நிலையத்தை பொருத்தவரை பெரும்பாலான குற்ற சம்பவங்கள் முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளன இதற்கு காரணம் இரவு நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது தான்
மீண்டும் கூறுகின்றோம் முடிந்தவரை காவல்துறையினாலுடன் இணைந்து பொதுமக்கள் உதவ வேண்டும் என கூறினார் .
இக் கூட்டத்தில் பெரிய கடைவீதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .