வரும் புதன்கிழமை திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா. நீதிபதிகள் துவக்கி வைக்கின்றனர் . குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் அறிக்கை .
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது :-
வரும் 08/01/2025 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு தமிழர் திருநாளான தை பொங்கல் விழா நமது குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நமது ஜெ.எம். நீதிமன்ற வளாகத்தில் அருகில் சிறப்பாக நடைபெற உள்ளது .
இந்த விழாவில் தமிழக பாரம்பரிய விளையாட்டுகளான கோல போட்டி, பானை உடைத்தால் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன.
அது சமயம் நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் இப் போட்டிகளில் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
போட்டு வளாகத்தில் நடைபெற உள்ள இந்த பொங்கல் விழாவினை மாண்புமிகு மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் மற்றும் மாண்புமிகு தலைமை குற்றவியல் நீதிபதி மீனாசந்திரா ஆகியோர் துவக்கி வைக்கிறார்கள்.
என குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் வெளியீட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்