Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையை கண்டித்து வரும் 7ம் தேதி கருப்பு சட்டை பேரணி

0

'- Advertisement -

திருச்சி மாவட்ட கூட்டுறவு துறையை கண்டித்து வரும் ஜனவரி ஜன.7-ஆம் தேதி ஜெபா கிழமை அன்று  கருப்புச் சட்டை அணிந்து திருச்சியில் பேரணியில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில், அவா் செய்தியாளா்களுக்கு  நேற்று சனிக்கிழமை அளித்த பேட்டியின் போது கூறியதாவது :-

திருச்சி மாவட்டம் அமராவதி கூட்டுறவு கடன் சங்கத்தில் வைப்பு நிதியில் உள்ள முறைகேடுகளை சுட்டிக் காட்டும் பணியாளா்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும், அங்கு பணியாற்றக்கூடிய பணியாளரின் குடும்பத்தினா் மீது கஞ்சா பொய் வழக்கு போட்டு திருச்சி மாவட்டக் கூட்டுறவுத் துறை பயமுறுத்துகிறது.

இதனைக் கண்டித்து பலமுறை போராட்டம் நடத்தியும், தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. அதேபோல், ரேஷன் கடை செயல்படும் கட்டடத்துக்கு பணியாளா்கள் வாடகை தர வேண்டும் என நிா்பந்திக்கப்படுகிறாா்கள்.

இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையை கண்டித்து ஜன.7-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று  தமிழ்நாடு ரேஷன் கடை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து கருப்பு சட்டை அணிந்து பேரணியாகச் சென்று திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்த உள்ளோம்.

இதற்கு நிரந்தர தீா்வு காணாத பட்சத்தில் அடுத்த கட்டமாக மாநிலச் சங்கங்கள் அனைத்தையும் இணைத்து மிகப் பெரிய அளவில் கவன ஈா்ப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என கூறினார். பேட்டியின் போது  மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.