Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வரும் 10ம் தேதி உள்ளூர் அரசு விடுமுறை அறிவிப்பு

0

'- Advertisement -

 

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த ஆண்டு இன்று 31.12.2024 முதல் 09.01.2025ஆம் தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும், 11.01.2025ஆம் தேதி முதல் 20.01.2025ஆம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது.

21 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் (சொர்க்க வாசல்) வருகின்ற ஜனவரி 10ஆம்தேதி அதிகாலை 5.15 மணிக்கு திறக்கப்படவுள்ளது.

Suresh

கடந்த ஆண்டு சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிந்த நிலையில் இந்த ஆண்டு சுமார் 3 லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளுர் மற்றும் வெளியூர் காவல்துறை அதிகாரிகள் என சுமார் 2500 பேர் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட உள்ளனர்.

இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு ஜனவரி 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்றால் அந்த இடங்களில் இந்த விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வரும் ஜனவரி 25ஆம் தேதி (25.01.2025) சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.