Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்த பகுதிகளில் நுழையக்கூடாது .. திருச்சி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை .

0

'- Advertisement -

 

மணப்பாறை அருகே எல்லைப் பாதுகாப்பு படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் மா.பிரதீப்குமாா் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் மேலும், கூறியதாவது:-

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்துக்குள்பட்ட அணியாப்பூா் கிராமம் அருகேயுள்ள வீரமலைப்பாளையத்தில், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையின், கேரள மாநிலம், ஆலப்புழா பிரிவு வீரா்கள், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளனா்.

டிச.29-ஆம் தேதி முதல் ஜன.7-ஆம் தேதி வரை தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். எனவே, இந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் நுழைய வேண்டாம். மேய்யச்சலுக்காக கால்நடைகளையும் அழைத்துச் செல்ல வேண்டாம். மனித நடமாட்டமோ, கால்நடைகள் செல்வதோ அனுமதிக்க முடியாது.

சுற்றுப்பகுதி மக்கள் இந்த உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.