Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கலெக்டர் அலுவலக பெண் ஊழியரை இரவு தனது படுக்கை அறைக்கு அழைத்த அதிகாரி.

0

'- Advertisement -

 

திருச்சி கலெக்டர் அலுவலக பெண் ஊழியரை படுக்கைக்கு அழைத்து அதிகாரி

கன்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் விசாரணை.

திருச்சி கலெக்டர் அலுவலகப் பெண் ஊழியரை படுக்கைக்கு அழைத்த அதிகாரியிடம் கன்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திருச்சியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஒரு அதிகாரி தனது அலுவலகத்தில் பணி புரியும் ஒரு இளம் பெண்ணிடம் ஆபாசமாக பேசி இரவில் தனது படுக்கைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பெண் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்துகள் குறித்து விசாரிப்பதற்கான குழுவில் புகார் அளித்தார்.
ஆனால் அந்த குழுவின் விசாரணைக்கு தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து திருச்சி மாநகர உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இதே அதிகாரி மீது பாலியல் ரீதியாக செயல்படுவதாக வந்த செய்தியை தொடர்ந்து கலெக்டர் அழைத்து விசாரணை மேற்கொண்டு அவரது அலுவலகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.

பின்னர் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டார். இப்போது மீண்டும் புகார் எழுந்துள்ளது என கூறப்படுகிறது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.