திருச்சி கே கே நகரில் நடந்த சோக சம்பவம் .2 மின் ஒப்பந்த பணியாளர்கள் பலி. மின் கம்பத்திலேயே ஒருவர் கருகி சாவு .
திருச்சியில் இன்று மின் அழுத்த கம்பத்திலேயே பலியாகி தொங்கிய மின் ஒப்பந்த ஊழியர்.
மற்றொரு ஊழியர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார் .
திருச்சி கேகே நகரை அடுத்த ஓலையூர்
ரிங் ரோடு பகுதியில் இன்று காலையில் உயர் அழுத்த மின் கம்பம் பழுதடைந்து இருந்தது.இதை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து புகார் வந்ததை தொடர்ந்து
பழுதான உயர் அழுத்த மின் கம்பத்தை சரி செய்யும் பணியில் இரண்டு ஒப்பந்த மின் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது திடீரென்று உயர் மின் அழுத்த கம்பத்தில் இருந்து மின்சாரம் இருவரும் மீது பாய்ந்தது .இதில் ஒருவர் தூக்கி எறியப்பட்டு தரையில் கீழே விழுந்தார்.
மற்றொருவர்
மின் கம்பத்தில் தொங்கியபடியேகருகி பரிதாபமாக இறந்து போனார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து மணிகண்டம் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த
ஊழியரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார் .
இந்நிலையில் மின் வயரில் தொங்கியபடியே இறந்து கிடந்தமின் ஊழியரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நவீன எந்திரத்தின் ஏணி மூலம் ஏறி அவரது உடலை மீட்டனர்
.இந்த சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி இறந்தது திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த அருணா பட்டியை சேர்ந்த கலாமணி (வயது 45) என்பது தெரிய வந்தது.மேலும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தவர் மணப்பாறை கல்லுப்பட்டி சேர்ந்த மாணிக்கம் (வயது32)என்பது தெரிய வந்தது.
.இந்த சம்பவம் கே.கே. நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.