Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கணவன் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலர்கள் மாறி மாறி உல்லாசம். மூச்சுத் திணறி இளம்பெண் பரிதாப பலி .

0

'- Advertisement -

 

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், குழந்தைகள் இல்லை.

மேலும், இவரது கணவர் பெங்களூருவில் தங்கி கட்டிட வேலை செய்து வருவதால், மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

இதனிடையே, இளம்பெண், தான் வசித்து வந்த அதே பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் கடன் வாங்கி உள்ளார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 11ஆம் தேதி கடன் தொகையை வசூலிக்க மகளிர் சுயஉதவிக் குழுவினர் இளம்பெண்ணின் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, அவரது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்துள்ளது.

இதனால் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு இருந்த படுக்கை அறையில் அரை நிர்வாணமாக ரத்தக்காயங்களுடன் இளம்பெண் இறந்து கிடந்துள்ளார். பின்னர், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த கந்திலி போலீசார், இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

Suresh

இதன்படி, அவரது செல்போனைக் கைப்பற்றி அவருடன் பேசியவர்களின் விவரங்களை சேகரித்தனர். அதில், குறிப்பிட்ட இரண்டு எண்களில் இருந்து அடிக்கடி அழைப்புகள் வந்துள்ளது. பின்னர் இது தொடர்பான தீவிர விசாரணையில், அந்த இரண்டு எண்களும் அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன் (26) மற்றும் விக்னேஷ் (25) ஆகியோர் என்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, அவர்கள் இருவரையும்ப் பிடித்து விசாரிக்கையில், உயிரிழந்த இளம்பெண்ணுக்கும், குமரேசனுக்கும் கடந்த 7 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. பெண்ணின் கணவர் மாதம் ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வருவதால், இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

ஆனால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குமரேசன் சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த நிலையில் தான் , இளம்பெண்ணுக்கு விக்னேஷ் உடன் தகாத உறவு ஏற்பட்டு உள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி உல்லாசமாக தனிமையில் இருந்துள்ளனர். இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு குமரேசன் ஊர் திரும்பி உள்ளார்.

அப்போது அந்த இளம்பெண்ணுக்கும், விக்னேஷுக்கும் தொடர்பு இருந்தது குமரேசனுக்கு தெரிய வந்துள்ளது. இதனால், இளம்பெண் மீது ஆத்திரமடைந்த குமரேசன், கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். ஆனால், இளம்பெண் அதற்கு மறுத்துள்ளார்.

எனவே, `உனக்கும் விக்னேஷூக்கும் தொடர்பு இருப்பதால் தான் என்னை நீ தவிர்க்கிறாய்’ எனக் கூறி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதன் ஒரு கட்டத்தில் இளம்பெண்ணை குமரேசன் தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த அவருடன் குமரேசன் வலுக்கட்டாயமாக உடலுறவில் இருந்துள்ளார். பின்னர், குமரேசன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இவ்வாறு குமரேசன் சென்ற சிறிது நேரத்தில், அதாவது நள்ளிரவில் விக்னேஷ் அங்கு வந்துள்ளார். அவரும் தன்னுடன் உல்லாசமாக இருக்க பெண்ணை அழைத்துள்ளார். ஆனால், தனக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறி அப்பெண் மறுப்பு தெரிவித்து உள்ளார். ஆனால், இளம்பெண்ணை தாக்கிய விக்னேஷும், அவருடன் வலுக்கட்டாய உறவில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் தான் இளம்பெண் மூச்சுத்திணறி இறந்துள்ளார். இதனையடுத்து, இளம்பெண் உயிரிழந்தது தெரிந்ததும், குமரேசன், விக்னேஷ் ஆகிய இருவரும் தலைமறைவாகி உள்ளனர். இந்த நிலையில், இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.