திருச்சி: முறைகேடான முறையில் செயல்பட்ட மருத்துவமனை மூட உத்தரவு
திருச்சி: முறைகேடான முறையில் செயல்பட்ட மருத்துவமனை மூட உத்தரவு
திருச்சி அருகே முறைகேடான முறையில் செயல்பட்ட மருத்துவமனை முட உத்தரவு.
திருச்சி மாவட்டம் ,லால்குடி தாலுக்கா, கல்லக்குடியில் இமானுவேல் கிளினிக் என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
பல வருடங்களாக செயல்பட்டு இம்மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவமனை டாக்டர் .கிரகோரி தற்போது கொறானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டாக்டர் .கிரகோரியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
இவரது மனைவி ஜான்சி பல் மருத்துவர் ஆவார்.
கணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் அவரது பணியினை,அதாவது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இதனை அறிந்த சுகாதார பிரிவு அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், தாலுக்கா அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் பல் டாக்டர் முறைகேடான முறையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த விபரங்கள் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து. 15 நாட்களுக்கு மருத்துவமனை செயல்படக் கூடாது என அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மீண்டும் பல் மருத்துவர் பொது மருத்துமோஅல்லது கொரோனா நோயாளிகளுக்கோ சிகிச்சை அளித்தால் மருத்துவமனை சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.