Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நேற்று மழையில் பள்ளி சென்று விபத்தில் சிக்கிய மாணவன் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி. லிப்ட் தந்த அரசு ஓய்வு பெற்ற பணியாளர் பலி

0

 

திருச்சி:
மழையில் பள்ளி சென்று விபத்தில் சிக்கிய மாணவன் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி. லிப்ட் தந்த அரசு ஓய்வு பெற்ற பணியாளர் பலி.

திருச்சி அருகே கார் மோதி ஓய்வு பெற்ற அரசு பணியாளர் பரிதாபமாக இறந்தார். இதில் லிப்ட் கேட்டு சென்ற பள்ளி மாணவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா மினிக்கியூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ ராஜ் (வயது 63). இவர் மணப்பாறை அரசுப்பள்ளியில் கிளர்க்காக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது கோவில்பட்டியில் உள்ள நகை கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வீட்டிலிருந்து கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கோவில்பட்டி அரசுப்பள்ளியில் 11 மற்றும் 8ம் வகுப்பு படித்து வரும் அதே
பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் நவீன்குமார் (வயது16), பால்ராஜ் மகன் கலைச்செல்வன் (வயது 13) ஆகியோர் நேற்று மாவட்ட ஆட்சி தலைவர் பள்ளிகளுக்கு விடுமுறை விடாத காரணத்தினால் பள்ளிக்கு மழையில் நனைந்தபடி நடந்து சென்றனர். அப்போது,
மாணவர்கள் இருவரும் அவ்வழியாக டூவீலரில் சென்ற செல்வராஜிடம் லிப்ட் கேட்டுள்ளனர். இதையடுத்து 2 மாணவர்களை யும் டூவீலரில் ஏற்றி கொண்டு செல்வராஜ் சென்றார்.

அப்போது திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மினிக்கியூர் பிரிவு சாலையை கடக்கும் போது, திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் செல்வராஜ் ஓட்டி வந்த டூவீலர் மீது பயங்கரமாக மோதியது. இதில்
3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் கலைச்செல்வனுக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு மாணவனும் தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வளநாடு போலீசார வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து நேற்றே இந்திய வாலிபர் சங்கத்த்தினர் கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று அந்த மாணவர்களின் மருத்துவ செலவுக்கு என்ன செய்வது என அந்த குடும்பத்தினர் தவித்து வருகின்றனர் .

Leave A Reply

Your email address will not be published.