திருச்சி:
குடிக்க மட்டும் பணம் வரும்போது கடனை அடைக்க முடியாதா ? மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை.
உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
திருச்சி ஜீவா நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் முத்துக்குமார். இவர் கடன் தொல்லையால் கடந்த சிலநாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் குடிபோதையில் முத்துக்குமார் வீட்டிற்கு வந்தார். அப்போது குடும்பத்தில் உள்ளவர்கள் கடனை அடைக்க முடியவில்லை குடிக்க மட்டும் பணம் உள்ளதா என சத்தம் போட்டுள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த முத்துக்குமார் வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் மனைவியின் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இது குறித்து அவரது மனைவி மாலா கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகிறார்.