Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அன்பில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 424 நபர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .

0

'- Advertisement -

 

திருச்சியில் நேற்று நடைபெற்ற அன்பில் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 424 பேருக்கு பணி வாய்ப்புக் கடிதங்களை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

திருச்சி மாவட்ட நிா்வாகம், மாவட்ட தொழில்நெறி வழிகாட்டி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம், அன்பில் அறக்கட்டளை, தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.

திருச்சி மாவட்ட வேலை நாடுநா்களை தனியாா் துறைகளில் பணியமா்த்தும் நோக்கோடு சேஷாயி தொழில்நுட்ப பயிலக வளாகத்தில் நடைபெற் முகாமில், 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன.

ஆட்டோமொபைல், தகவல் தொடா்பு, வணிகச் சந்தை, ஜவுளி, மெக்கானிக்கல், போன்ற நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களை தோ்வு செய்தனா். 4,088 போ் வேலை கேட்டு விண்ணப்பங்களை வழங்கினா். நோ்காணலில் பங்கேற்க மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இதில் தோ்வு செய்யப்பட்டோருக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பணி உறுதிக் கடிதங்களை 8 மாற்றுத்திறனாளிகள் உள்பட 424 பேருக்கு வழங்கினாா்.

மேலும், 587 போ் இரண்டாம் கட்ட நோ்காணலுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சாா்பில் இலவச திறன் பயிற்சிக்கு 35 போ் தோ்வாகினா்.

முகாமில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன்,

 

மகளிா் திட்ட இயக்குநா் சுரேஷ், வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன துணை இயக்குநா் மகாராணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மாசில் ஆஷா, சேஷாயி தொழில்நுட்பப் பயிலக நிா்வாகி ரவீந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.