சமத்துவ கிறிஸ்மஸ் விழா நடத்துவது என ஜே.கே. சி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்.
சமத்துவ கிறிஸ்மஸ் விழா நடத்துவது என ஜே.கே. சி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
கெளரவத் தலைவர் பேராசிரியர்கள் ரவி சேகர், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சட்ட ஆலோசகர் சி.பி ரமேஷ், மகளிர் பிரிவு தலைவி சகுந்தலா சந்தாணகிருஷ்னன், மாவட்ட ஒருங்கினைப்பாளர் ஐசக்பால் மாணிக்கம், பேராசிரியர்
அருள், ஸ்டீல் என்.எம்.சலாவுதீன், ஆசிரியர் அலெக்சாண்டர், ஜெயபிரகாஷ், ஆடிட்டர் ரிச்சர்டு, பிஆர்ஒ விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கௌரவ செயலாளர் ஆசிரியர் எம். நடராஜன் வரவேற்புரையாற்றினார்.
முடிவில் டிரஸ்டி. மனோகரி ராஜ்குமார் நன்றி கூறினார். கூட்டத்தில் வருகிற 23.12.2024ல் 35வது சமத்துவ கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் 35 நபர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் 50 பெண்களுக்கு புடவை மற்றும் பொருட்கள் வழங்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது.புதிய நிர்வாகிகள் அனைவரும் பதவி ஏற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.