திருச்சியில்
சுற்றுலா வேன் திருட்டு.
திருச்சி சுப்பிரமணியபுரம் ஔவையார் தெரு பகுதியை சேர்ந்தவர் குமரவேல் ( வயது50 ) கடந்த 18 ந்தேதி மாலை புதுக்கோட்டை நெடுஞ்சாலை சுப்புரமணியபுரம் பகுதியில் வேனை வழக்கம்போல் நிறுத்தி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது வேனை காணவில்லை, மர்ம நபர்கள்
திருடி சென்றனர்.
இதானால் அதிர்ச்சி அடைந்த குமரவேல் இதுகுறித்து கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப் புகாரின் பேரில் கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேனை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.