Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேர்தல் பணி: கூறியது ரூ.1000, வழங்கியது ரூ.250. திருச்சியில் மாணவர்கள் புகார்.

0

'- Advertisement -

தேர்தல் பணிக்கான பேசிய சம்பளம் உடனடியாக வழங்க கோரி மாணவர்கள் மனு.

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் தொகுதிக்குட்பட்ட 154 முதல் 162 வரையிலான ஓட்டுச்சாவடிகளில் கையுறை வழங்குதல் சானிடைசர் வழங்குதல் போன்ற சுகாதார பணிகளில் தன்னார்வலர்களும், கல்லூரி மாணவர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

Suresh

இந்த தொகுதியில் தேர்தல் அலுவலராக பணியாற்றிய வருவாய் ஆய்வாளர் மூர்த்தி என்பவர் தலா ரூ.1000 சம்பளம் வழங்கப்படும் என கூறி அவர்களைப் பணி அமர்த்தி உள்ளார்.

காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பணியாற்றிய தங்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக வெறும் 250 ரூபாய் மட்டுமே அளித்துள்ளனர் .

எனவே சுகாதாரப் பணியாளர்களாக வேலை செய்த மாணவர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் தேர்தல் பணிக்கான மீதி ஊதியம் உடனடியாக வழங்கக் கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.