Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இனி வாக்களித்த மக்களை நேரில் சந்திக்க முடியாது என துரை வைகோ கூறியிருப்பது அழகல்ல . திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அறிக்கை .

0

 

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை. வாக்களித்த மை கூட இன்னும் சிலருக்கு முழுவதுமாக மறையவில்லை. திருச்சியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அனைத்து வேட்பாளரும் பொதுமக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்ததுடன் நன்றி அறிவிப்பு போஸ்டர்களும் அடித்தனர். இது எதுவும் செய்யாதவர் துரை வைகோ.
ஆனால், மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற பின் புதுக்கோட்டை சட்டசபை தொகுதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர்

“நேரில் வந்து சந்திப்பதற்கு இனி “வாய்ப்பு இல்லை என உரைப்பது, மக்கள் பணி ஆற்ற வருவோர்க்கு அழகல்ல. Unethical.

அவருக்காக உழைத்த சான்றோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். Really unfortunate.

சந்தர்ப்பவாதிகள் விலகினாலும், திருச்சி நாடாளுமன்ற மண்ணின் மைந்தர்கள், ஓயப் போவதில்லை.

டிடிவி தினகரனின் ஆணைப்படி, வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளையும்,
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இயங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளையும்,

திருச்சி வாழ் மக்கள், எப்பொழுதும், எந்நேரமும் “நேரடியாக” சந்திக்கலாம்.

“வாரிசு கோட்ட்டாவில்” அரசியல் பதவிகளுக்கு வராத,

இம்மண்ணின் மைந்தர்கள் என்ற தார்மீக முறையில், முழு நேர களப்பணி ஆற்றும் நாங்கள், எங்களால் முடிந்த பணிகளை / அறப்போராட்டங்களை எந்தவித சமரசமும் இன்றி முன்னெடுப்போம் என தெரிவித்துக் கொள்கிறோம் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

( திருச்சியில் போட்டியிட்ட முன்னணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்தும் , நன்றி போஸ்டர்களும் அடித்தனர் . ஆனால் துரை வைகோ இதுவரை இதை எதுவும் செய்யவில்லை . பாவம் வாக்களித்த பொதுமக்கள் . முன்னாள் எம்பி திருநாவுக்கரசருக்கு எங்கள் எம் பி யை காணவில்லை என நான்கு வருடம் கழித்து தான் போஸ்டர் அடித்தனர் . ஆனால் தற்போது இப்போதே அந்த போஸ்டரை அடிக்க வேண்டிய சூழ்நிலையில் திருச்சி நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் உள்ளனர் என்பது வேதனைக்குரிய விஷயம் ஆகும் )

Leave A Reply

Your email address will not be published.