Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் சன்னதியில் காய்ந்த மாலை. கண்டுகொள்ளாத கோயில் நிர்வாகம். ரங்கநாதர் நடவடிக்கை எடுப்பாரா? பக்தர்கள் எதிர்பார்ப்பு .

0

 

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும், திருவரங்கம் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும்.

இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராசகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987-ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. சோழ நாட்டு காவிரி ஆற்று கரையில் அமைந்துள்ள முதல் திவ்விய தேச தலம் இது. இந்த புகழ்மிக்க திருத்தலத்தில் இன்று ரங்கநாதரின் சன்னிதானத்தில் உள்ள மாலை மாற்ற கூட ஆள் இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம் .

பெருமாளுக்கு கூந்த மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் அதுவும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை பக்தர்கள் தரிசிக்க வரும் எண்ணிக்கை வெகுவாக இருக்கும் .

இந்நிலையில் புரட்டாசி சனிக்கிழமையான நேற்று பெருமானின் சன்னதிக்கு நேர் எதிரில் உள்ள ‘ கம்பத்தடி பகுதியில் உள்ள தினமும் புதியதாக மாலை மாற்றும் நிலையில் சிறப்புமிக்க புரட்டாசி சனிக்கிழமை ஆன நேற்று கூட அந்த மாலை மாற்றாமல் காய்ந்த மாலையை இருந்தது.

இதனை கண்ட ஸ்ரீரங்கநாதரின் பக்தர்கள் மிகுந்த மன வருத்தம் அடைந்தனர் .

மேலும் தினமும் மாற்றக்கூடிய இந்த மாலையை புரட்டாசி சனிக்கிழமை அன்று கூட மாற்ற முடியாத கோயில் இணை ஆணையர்.

இதை கண்டுகொள்ளாதது ஏன் பக்தர்கள் வருத்தம் தெரிவித்தனர் .

கோவிலில் வெப்சைட் போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு காவலர்கள் அனுமதி மறுப்பு. 500 ரூபாய் கொடுத்தால் ரங்கநாதர் சன்னதியில் அமர வைத்து கவனித்து அனுப்புகிறார்கள் .

 

ரங்கநாதருக்கு இந்த நிலையா?

இதற்கு முடிவு ரங்கநாதரே ….

ரங்கா ரங்கா .

Leave A Reply

Your email address will not be published.