தீபாவளி நேரத்தில் மலைக்கோட்டை பகுதியில் உள்ள கடைகளுக்கு வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரி கோவிந்தராஜுலு மாநகராட்சி ஆணையரிடம் மனு.
தீபாவளி நேரத்தில் மலைக்கோட்டை பகுதியில் உள்ள கடைகளுக்கு வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரி கோவிந்தராஜுலு மாநகராட்சி ஆணையரிடம் மனு.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு தலைமையில் தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் நேற்று மாலை திருச்சி மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று மாலை வந்தனர். அவர்கள் மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து தங்கள் குறைகள் குறித்து முறையிட்டனர்.
இதுபற்றி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் மையப்பகுதி திருச்சி, திருச்சியின் மையப்பகுதி மலைக்கோட்டை மற்றும் இதை சுற்றி உள்ள என்.எஸ்.பி. சாலை, சின்னக்கடை வீதி, பெரியகடைவீதி, நந்திகோவில் தெரு போன்ற பகுதிகள் ஆகும். இங்கு பல ஆண்டுகளாக வார்த்தகர்கள் தொழில் செய்து வருகிறார்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி, ஜி.எஸ்.டி., சொத்துவரி, தண்ணீர் கட்டணம், குப்பை வரி, தொழில் வரி போன்ற பல்வேறு வரிகளை வியாபாரிகள் செலுத்தி வருகிறார்கள்.
கடந்த 6 மாத காலமாக அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் போன்றவற்றில் மக்கள் வந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தரைக்கடை என்ற போர்வையில் அத்துமீறி கடைகளின் முன் சிறுவியாபாரிகள் கடைகளை போட்டிருப்பதால், அந்த நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் வந்து செல்லமுடிவதில்லை. மலைக்கோட்டைக்கு வெளிநாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
ஆனால் மலைக்கோட்டை தெப்பகுளமே தெரியாத அளவுக்கு கடைகள் போட்டு மறைத்துள்ளனர். ஏற்கனவே ஆன்-லைன் வர்த்தகத்தினால் தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற பிரச்சினைகளால் அந்த பகுதி வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மலைக்கோட்டை பகுதியில் உள்ள கடைகளுக்கு வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எங்களுக்கு உள்ள குறைபாடுகளையும் வியாபாரிகள் அனைவரும் சேர்ந்து மாநகராட்சி ஆணையரை சந்தித்து கூறியிருக்கிறோம்.
ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கிறோம் என்று ஆணையாளர் கூறியிருக்கிறார். நாங்கள் சிறுவியாபாரிகளுக்கு எதிரானவர்கள் கிடையாது. அவர்களும் தொழில் செய்யட்டும். அவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கட்டும். மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ, போக்குவரத்துக்கோ இடையூறு இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் தொழில் செய்யட்டும். அவர்களுக்கும் நாங்கள் பாதுகாப்பு கொடுக்கதான் போகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆணையாளரை சந்தித்த போது, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் தமிழ்செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி.கண்ணன், மாநகர பொருளாளர் ராஜா, இளைஞர் அணி தலைவர் கே.எம்.எஸ்.மைதீன், இளைஞரணி செயலாளர் திருமாவளவன்,
மங்கள் அண்ட் மங்கள்உரிமையாளர் மூக்கப் பிள்ளை, சாரதாஸ் உரிமையாளர் ரோஷன், குரு ஓட்டல் ரங்கநாதன், ஆனந்தா கார்ப்பரேஷன் ரமேஷ், அஜந்தா ஹோட்டல் கண்ணன், பாரத் கன்ஸ்ட்ரக்ஷன் நூர், அகமது பிரதர்ஸ் உமர், சித்திக், விக்னேஷ் ஓட்டல் ஆடிட்டர் முத்துக்குமார், பெமினா ஹோட்டல் சார்பில் சுப்பிரமணியன்
உள்பட தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.