ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் சட்ட விரேதமாக ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீஸாா் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது போலீஸாரைக் கண்டதும் அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு அதன் ஓட்டுநா் தப்பி ஓடிவிட்டாா். அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், அதை சோதனையிட்ட போது, அதில் 30 மூட்டைகளில் 1,500 கிலோ ரேசன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
பின்னா் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா் ஆா்.எஸ். மங்கலம் காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிவு ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தப்பட்டது , கடத்தி வந்த நபர்கள் யார் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.