திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 60வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி கோட்டம் தெற்கு ரயில்வே துறை பிரிவு மேலாளர் எம்.எஸ்.அன்பழகன், திருச்சி மங்கள் & மங்கள் பி.மூக்கப்பிள்ளை மற்றும் திருச்சி சேவா சங்க நிர்வாகிகளான தலைவர் சகுந்தலா சீனிவாசன், செயலாளர் சரஸ்வதி, உப தலைவர் கமலா பண்டாரி, பொருளாளர் லெட்சுமி சுப்ரமணியன், பள்ளிகளின் செயலர் கீதா கௌரி , இணைச் செயலாளர் சீதா லெட்சுமி, மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இறைவணக்கத்திற்கு பிறகு பள்ளியின் தலைமையாசிரியை ஏஎல்.நாகம்மை அனைவரையும் வரவேற்றார்.
வரவேற்புக்குபின் அன்பழகன் கொடியேற்றி, விளையாட்டு விழா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, விழாவை தொடங்கி வைத்தார் .
Under-14, Under-17, Under-19, மனைவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
பிறகு 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், சிலம்பம் மற்றும் ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகளும் மாணவிகள் செய்து காட்டினர்.
தலைவர் சிறப்புரைக்கு பின்பு மாணவிகளுக்கு பரிசுகளை பி.மூக்கப்பிள்ளை வழங்கினார்.
Under-14, Under-17, Under-19 ஆகிய மூன்று பிரிவுகளையும் சேர்த்து ஒட்டுமொத்த பரிசு கேடயம் ப்ளூ ஹவுஸ் பெற்றது.
பள்ளிகளின் செயலர் கீதா கௌரி நன்றியுரை நல்கினார்.
நன்றியுரைக்கு பின்பு நாட்டுப்பண்ணுடன் விழா சிறப்பாக நிறைவுற்றது.