அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கருப்பூர் ஊராட்சியில் உறுப்பினர் உரிமை அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் மணப்பாறை தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கிளை செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் மேற்கொண்டார்.
மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சின்னசாமி ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ), ஒன்றிய செயலாளர்கள் சேது, பழனிசாமி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, மாவட்ட மீனவரணி செயலாளர் பொன்னுசாமி, பொதுக்குழு உறுப்பினர் இஸ்மாயில், மற்றும் ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.