Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக 5 மாத பெண் குழந்தையை கொன்றுவிட்டு, காணவில்லை என நாடகமாடிய பெண் கைது .

0

'- Advertisement -

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த சிறுநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிராஜ்
(வயது 24) இவர் செம்மறி ஆடுகள் மேய்க்கும் கூலி தொழிலாளி ஆவார்.இவரது மனைவி பெயர் ராஜேஸ்வரி (வயது 21)

இவர்களுக்கு 3 வயதில் ராதிகா என்ற பெண் குழந்தையும், லாவண்யா என்ற 5 மாத கைக்குழந்தையும் உள்ளது.

ஆடுகளை கிடைகள் போட வேண்டும் என்பதால், மணிராஜ் வெவ்வேறு ஊர்களில் தங்கியிருந்து ஆடுகளை மேய்த்து வருகிறார். இதனால், ராஜேஸ்வரி தன்னுடைய 2 பெண் குழந்தைகளுடன் கடலூர் மாவட்டம் வடலூரிலேயே வசித்து வந்தார்.

இந்நிலையில், வடலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம், ராஜேஸ்வரி பதறியடித்து கொண்டு ஓடிவந்தார். தன்னுடைய 5 மாத குழந்தையை, கணவர் மணிராஜ் 2 பேருடன் வந்து தூக்கிச்சென்றுவிட்டதாகவும், அந்த குழந்தையை மீட்டு தரவேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசாரும், மணிராஜ் எங்கே இருக்கிறார்கள் என்று தேடினார்கள்.

அப்போதுதான், அவர் தொழுதூர் பகுதியிலேயே தங்கியிருந்து ஆடுகளை மேய்த்து வருவது தெரியவந்தது. அதாவது, குழந்தை சம்பவத்துக்கும், மணிராஜுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது உறுதியானது.

எனவே, புகார் கொடுத்த ராஜேஸ்வரி மீதே போலீசாருக்கு சந்தேகம் திரும்பியது
இதையடுத்து, ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தினார்கள் அப்போது ராஜேஸ்வரி, தன்னுடைய குழந்தைக்கு காதில் திடீரென சீழ் வடிந்ததால், மருந்து போட்டதாகவும், ஆனால், கொஞ்ச நேரத்திலேயே குழந்தைக்கு மூச்சுத்திணறி இறந்துவிட்டதாகவும், சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் வடலூர்-கடலூர் சாலையில் உள்ள அய்யனேரி அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் குழந்தையை வீசியதாகவும் கூறினார்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த கழிவுநீர் கால்வாய் பகுதிக்கு ஓடினார்கள். மிதந்து கிடந்த குழந்தையின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், போலீசாருக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், குழந்தைக்கு காதில் சீழ் வடியவும் இல்லை, ராஜஸ்வரி காதில் மருந்து ஊற்றவும் இல்லை என்பது உறுதியானது.

இதையடுத்து, மறுபடியும் ராஜேஸ்வரியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான், ராஜேஸ்வரியின் கள்ளக்காதல் விவகாரமும் வெளியே வந்தது.. தன்னுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 5 மாத குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தன் குடும்பத்துக்காக ஊர் ஊராக சென்று ஆடுகளை மேய்த்து வரும் கணவர் மணிராஜ், ராஜேஸ்வரியின் செயலை அறிந்து அதிர்ச்சியில் உள்ளாராம் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.