காலியாக உள்ள 47- வது வார்டிற்கு விரைந்து தேர்தல் நடத்த கோரி அமமுக சார்பாக திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மனு.
காலியாக உள்ள 47- வது வார்டிற்கு விரைந்து தேர்தல் நடத்த கோரி அமமுக சார்பாக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மனு.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் இன்று மாநகர ஆணையரை சந்தித்து மனு அளித்தார்.
அம்மனு கூறியிருப்பதாவது :-
இதில் “கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி, நான் வகித்து வந்த 47 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன்.
அதைத்தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களாக, மாமன்ற உறுப்பினர் இல்லாத காரணத்தினால், 47 வது வார்டு பகுதிக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை கேட்டு பெற முடியாத நிலை உள்ளது.
47 வது வார்டு மக்கள் படும் இன்னல்களையும், அவர்களின் கருத்துக்களையும் மாமன்றம் மற்றும் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி வேண்டிய சலுகைகளைப் பெற, 47 வது வார்டுக்கு விரைந்து மாமன்ற உறுப்பினர் தேர்தல் நடத்து ஆவண செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிகழ்வில் ஏர்போர்ட் பகுதி செயலாளர் மதியழகன், உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார், ஏர்போர்ட் பகுதி அவைத்தலைவர் கருணாநிதி, வட்ட செயலாளர்கள் நிக்ஸன், கொட்டப்பட்டு ஆனந்த் ஆகியோர் உள்ளனர்.