விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் தந்தை மகள் பலி, இருவர் படுகாயம்.
விராலிமலை அருகே தேசிய நெடுச்சாலையில் கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் தந்தை, மகள் உயிரிழந்தனர்.
மதுரை வரதராஜூ சாலையைச் சேர்ந்தவர் முத்துவேல் மகன் முருகன்(40) இவர் தனது காரில் மனைவி சவுமி(34) மகன் வருண் கார்த்திக்(11), மகள் தியா(6) ஆகிய நான்கு பேருடன் திருச்சிக்கு வந்துவிட்டு மீண்டும் விராலிமலை வழியாக வெள்ளிக்கிழமை மாலை மதுரைக்கு சென்று கொண்டிருந்தார்.காரை முருகன் ஓட்டியுள்ளார்.
விராலிமலை -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடும்பாளூர் அடுத்த இடையபட்டி அருகே கார் சென்ற போது காரின் முன் டயர் வெடித்து கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கட்டை தாண்டி மறுபுறம் உள்ள சாலைக்கு சென்றது அப்போது மதுரையில் இருந்து திருச்சி வந்து கொண்டிருந்த நாகராஜன் என்பவர் ஓட்டி வந்த மற்றொரு கார் மீது முருகன் ஓட்டி வந்த கார் பலமாக மோதியது இதில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்த்தது. இதில், காரில் பயணித்த முருகன் (40), மனைவி சௌமி (34),மகன் வருண் கார்த்திக் (11),மகள் தியா (6) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவ்வழியாக வந்தவர்கள் காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தியா உயிரிழந்தார். சிகிச்சையில் இருந்த முருகன் சற்று நேரத்தில் உயிரிழந்தார்.பலத்த காயங்களுடன் சவுமி, வருண் கார்த்திக் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரையில் இருந்து திருச்சி வந்த காரை ஓட்டி வந்த நாகராஜன் காயமின்றி தப்பினார் விராலிமலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.